நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அவசரகால கடன் உத்திரவாத திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) 31.03.2022 வரை நீட்டிப்பு

Posted On: 29 SEP 2021 3:41PM by PIB Chennai

அவசரகால கடன் உதவி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 1.15 கோடிக்கும்  மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளன. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, தொழிலதிபர்கள்  தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க, தகுதியான கடன்தாரர்களுக்கு இத்திட்டம்  கடனுதவி வழங்கியது.

இத்திட்டத்தின் கீழ், 2021 செப்டம்பர் 24ம் தேதி வரை வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2.86 லட்சம் கோடியை தாண்டியது. மொத்தம் வழங்கப்பட்ட கடன் உத்திரவாதத்தில், 95 சதவீதம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

தகுதியான தொழில் துறைகளுக்கு தொடர்ந்து கடனுதவியை உறுதி செய்ய, அவசரகால கடன் உதவி திட்டத்தை நீட்டிக்க வேணடும் என அரசுக்கு பல தொழில் துறை அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதனால் இத்திட்டத்தை 31.03.2022 வரை நீட்டிக்கவும், அல்லது இத்திட்டத்தின் கீழ் உத்திரவாத கடன் தொகை ரூ.4.5 லட்சம் கோடி இலக்கை எட்டுவது இதில் எது முன்போ  அதுவரை இத்திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்கான கடைசி தேதி 30.06.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759251

 

---


(Release ID: 1759419) Visitor Counter : 438