மத்திய பணியாளர் தேர்வாணையம்
பெண்களுக்கான தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகள்(II) 2021: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Posted On:
24 SEP 2021 1:17PM by PIB Chennai
தேசிய பாதுகாப்பு படை அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில் (II), பெண்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி, திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப வசதியை தனது இணையளத்தில் (upsconline.nic.in) ஏற்படுத்த மத்தியப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த ஜூன் 9ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/2021-NDA-II-ல் திருத்தம் செய்யப்பட்டது.
இந்த திருத்த அறிவிப்பு மத்திய அரசு தேர்வாணை இணையளத்தில் (www.upsc.gov.in) உள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு, இந்த ஆன்லைன் விண்ணப்ப வசதி, 24.09.2021-லிருந்து, 8.10.2021 (மாலை 6 மணி வரை) திறந்திருக்கும்.
*****************
(Release ID: 1757680)
Visitor Counter : 298