நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் 4வது கட்டம்: 56.53 சதவீத உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2021 4:28PM by PIB Chennai
பிரதமரின் கரிப் கல்யான் அன்ன யோஜனாவின் 4வது கட்டத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசம், நாட்டிலேயே அதிக சதவீத உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளது.
பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனாவின் 4வது கட்ட ஒதுக்கீட்டில் (2021 ஜூலை முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை) 93 சதவீத உணவு தானியங்களை அந்தமான மற்றும் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் எடுத்துச் சென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஒடிசா 92 சதவீதம், திரிபுரா மற்றும் மேகாலயா 73 சதவீதம், தெலங்கானா, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் 71 சதவீதம் உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளன.
4வது கட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 56.53 சதவீத உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 3வது கட்டத்தில் 98.41 சதவீத உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் 4 கட்டங்களிலும் மொத்தமாக 600 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜானா திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு மற்றும் எடுத்துச் செல்லப்பட்ட உணவு தானியங்களின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம். https://pib.gov.in/ PressReleasePage. aspx?PRID=1756998
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1757025)
வருகையாளர் எண்ணிக்கை : 311