சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

1.2 கோடி ஆலோசனைகளை வழங்கியது இ-சஞ்சீவனி தேசிய தொலை மருத்துவச் சேவை

Posted On: 21 SEP 2021 10:46AM by PIB Chennai

இந்திய அரசின் தேசிய தொலைமருத்துவச் சேவையான -சஞ்சீவனி, 1.2  கோடி (120 லட்சம்) ஆலோசனைகளை வழங்கி நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் மாபெரும் தொலை மருத்துவச் சேவையாக வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 90,000 பேருக்கு சேவை அளிப்பதன் வாயிலாக நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் இடையே இந்தச் சேவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-சஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் சுமார் 67,00,000 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் இந்தச் சேவை அளிக்கப்படுகிறது.

இந்தியாவின் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் நிலவும் மின்னணு சுகாதார இடைவெளியை -சஞ்சீவனி தேசிய தொலை மருத்துவச் சேவை நீக்குகிறது.

இந்தியாவில் மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள தொலை மருத்துவ ஆலோசனைகளில் (12033498) முதல் 10 இடங்களை வகிக்கும் மாநிலங்களின் விவரங்கள் வருமாறு:

ஆந்திரப்பிரதேசம் (37,04,258), கர்நாடகா (22,57,994), தமிழ்நாடு (15,62,156), உத்தரப்பிரதேசம் (13,28,889), குஜராத் (4,60,326), மத்தியப் பிரதேசம் (4,28,544), பிகார் (4,04,345), மகாராஷ்டிரா (3,78,912), மேற்கு வங்கம் (2,74,344) மற்றும் கேரளா (2,60,654).

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756649

*****


(Release ID: 1756725) Visitor Counter : 324