எஃகுத்துறை அமைச்சகம்
இந்திய எஃகு சங்கத்துடன் மத்திய அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் கலந்துரையாடல்
प्रविष्टि तिथि:
20 SEP 2021 4:20PM by PIB Chennai
மத்திய எஃகு இணை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், இந்திய எஃகு சங்கத்துடன் இன்று கலந்துரையாடினார்.
தேவையை அதிகரிப்பதற்கான ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர், வீடு கட்டுதல், சமையல் எரிவாயு மற்றும் தண்ணீர் குழாய்கள் போன்ற திட்டங்களில் எஃகை பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் குறித்து அதிக விழிப்புணர்வை தொழில்துறையினர் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
தமது நிறைவு உரையில், தற்சார்பு இந்தியாவை நோக்கிய எஃகு அமைச்சகத்தின் உறுதித்தன்மையை மீண்டும் வலியுறுத்திய அவர், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பங்குபெறும் வகையில் ஒவ்வொரு நிறுவனமும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தைக் கொண்டாடுவது தொடர்பான கருத்துக்களை முன்வைக்குமாறும், இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபடுமாறும் தொழில்துறையினரை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756419
*****************
(रिलीज़ आईडी: 1756438)
आगंतुक पटल : 224