வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பாக செப்டம்பர் 20-26 வரை விடுதலையின் அம்ருத் மஹோத்சவக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்

Posted On: 19 SEP 2021 2:27PM by PIB Chennai

விடுதலையின் அம்ருத் மஹோத்சவக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஒருவார கால சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி செப்டம்பர் 20-26 வரை வர்த்தகம் மற்றும் வணிக வாரத்தை, வர்த்தகத்துறை கடைபிடிக்கும். தற்சார்பு இந்தியா; பசுமை மற்றும் தூய்மையான சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியா உள்ளிட்டவை குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து 739 மாவட்டங்களிலும் வர்த்தகம் மற்றும் வணிக உத்சவம் நடைபெறும்.

செப்டம்பர் 24-26 வரை 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெளிநாட்டு வர்த்தகத்தின் தலைமை இயக்குநரகம், ஏற்றுமதி மற்றும் சந்தை மேம்பாட்டு உதவி மையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஆகியவை இணைந்து ஏற்றுமதியாளர் மாநாடு/ கூட்டங்களை நடத்தும். இந்த நிகழ்ச்சிகளின் போது அரசு மின்னணு வர்த்தக தளத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இணைக்கும் பணிகளும் நிறைவடையும்.

வர்த்தகம் மற்றும் வணிக வாரத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் மொத்தம்  35 ஏற்றுமதி ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்/ கண்காட்சிகள் நடைபெறும்.

வடகிழக்குப் பகுதிகளில் தனியார் தொழில்துறை பூங்காக்களுடன்  கலந்துரையாடலும், முதலீட்டாளர் உச்சிமாநாடும் காணொலி வாயிலாக நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756243

----

 

 



(Release ID: 1756272) Visitor Counter : 286