மத்திய அமைச்சரவை
திரும்பச் செலுத்தப்படாத தொகை உள்ள வங்கிக் கடன் பிணைச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக, தேசிய சொத்துக்கள் மறுகட்டமைப்பு நிறுவனம் என் ஏ ஆர் சி எல் வழங்கிய உத்தரவாத ரசீதுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவாதம் – அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
15 SEP 2021 4:13PM by PIB Chennai
திரும்பச் செலுத்தப்படாத தொகை உள்ள வங்கிக் கடன் பிணைச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக, என் ஏ ஆர் சி எல் வழங்கிய உத்தரவாத ரசீதுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவாதம் 30,600 கோடி ரூபாய்க்கு நேற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் அறிவிப்புகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாகும்.
மத்திய அரசு என் ஏ ஆர் சி எல் வழங்கிய உத்தரவாத ரசீதுகளுக்கு ஆதரவளிக்கும். 30600 கோடி ரூபாய் வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
உத்தரவாத ரசீதுகளுக்கான தகுதி மதிப்பீட்டுக்கும், கடன் சொத்துக்கள் குறித்து, தீர்வு காணுதல் அல்லது சொத்துக்களை விற்றல் (லிக்விடேஷன்), ஆகியவற்றின் மூலம் உண்மையாக அதிலிருந்து கிடைக்கும் தொகைக்கும் இடையிலான வேறுபாட்டை ஈடு செய்யும் வகையில், என் ஏ ஆர் சி எல் உத்தரவாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். என் ஏ ஆர் சி எல், உத்தரவாதத்துக்கான ஆண்டு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
நன்மைகள்:
என் ஏ ஆர் சி எல் – ஐடிஆர்சிஎல் அமைப்பு பல்வேறு வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்களை ஒருங்கிணைக்க உதவி, ஐபிசி முறை உட்பட பல முறைகள் மூலமாக, துரிதமான ஒரு முனை முடிவெடுத்து தீர்வு காண வழிவகுக்கும். இது வாராக்கடன் பிணைச் சொத்துக்களுக்குத் தீர்வு காண்பதற்கான விரைவான நடவடிக்கையை ஊக்குவிக்கும். இதன் மூலம் சிறந்த மதிப்பைப் பெற முடியும். அது தொடர்பான மதிப்பு கூட்டுதல் பணிகளுக்காக ஐடிஆர்சிஎல் - இந்திய கடன் தீர்க்கும் நிறுவனம் சந்தை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தும்.
இந்த அணுகுமுறை, வங்கிப் பணியாளர்கள், வணிகம் மற்றும் கடன் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த அனுமதிக்கும். இந்த சொத்துக்கள் மற்றும் உத்தரவாத ரசீதுகளை வைத்திருக்கும் வங்கிகள் இதற்கான பலன்களைப் பெறுவார்கள். இந்திய அரசாங்க உத்தரவாதம், உத்தரவாத ரசீதுகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். ஏனெனில் இதுபோன்ற உத்தரவாத ரசீதுகள் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன.
***
(Release ID: 1755659)
Visitor Counter : 251