பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூவில் பாதுகாப்புத்துறை அலுவலக வளாகங்களை பிரதமர் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 15 SEP 2021 2:36PM by PIB Chennai

கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் பாதுகாப்புத்துறை அலுவலக வளாகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 16ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். ஆப்பிரிக்க அவென்யூவில் உள்ள பாதுகாப்புத்துறை அலுவலக வளாகத்துக்கு செல்லும் அவர், தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின், அங்குள்ளவர்களிடம் பிரதமர் உரையாற்றுவார்.

புதிய பாதுகாப்புத்துறை அலுவலக வளாகம் பற்றி:

புதிய பாதுகாப்புத்துறை  அலுவலக வளாகங்களில், தரைப்படை, கடற்படை, விமானப்படை உட்பட பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் சுமார் 7,000 அதிகாரிகள் இடம் பெறுவர்இந்த கட்டிடங்கள், நவீன, பாதுகாப்பான பணிச் சூழலை வழங்கும்கட்டிட செயல்பாடுகளை நிர்வகிக்க, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதுஇது கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கும்.

புதிய பாதுகாப்புத்துறை அலவலக வளாகம் நவீன வசதிகள், எரிசக்தி குறைவான தொழில்நுட்பம் மற்றும் விரிவான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுடன் உள்ளனஇதில் எல்ஜிஎஸ்எப் (Light gauge steel frame) என்ற புதிய மற்றும் நீடித்த கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது,

இந்த கட்டிடத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. இது வழக்கமான ஆர்சிசி கட்டுமான காலத்தை விட  24-30 மாதங்கள் கட்டுமான காலத்தை குறைத்தது.  இந்த கட்டிடங்கள் மாசு ஏற்படாத தூய  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளை ஊக்குவிக்கின்றன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர், இணையமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர்இணையமைச்சர்  பாதுகாப்பு படை தலைமை தளபதி, , முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

 

------

 


(रिलीज़ आईडी: 1755060) आगंतुक पटल : 283
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam