பிரதமர் அலுவலகம்

குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதற்கு புபேந்திர படேலுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 13 SEP 2021 2:57PM by PIB Chennai

குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதற்கு திரு புபேந்திர படேலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்  விஜய் ரூபானியையும் பாராட்டியுள்ளார். முதல்வராக 5 ஆண்டுகாலம் பணியாற்றிய போது, மக்களுக்கு சாதகமான பல நடவடிக்கைகளை விஜய் ரூபானி மேற்கொண்டார் என பிரதமர் கூறியுள்ளார். 

சமூகத்தின் அனைத்து தரப்பினருக்காவும் அவர் அயராது உழைத்தார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து தொடர் சுட்டுரையில் பிரதமர் கூறியிருப்பதாவது:

‘‘குஜராத் முதல்வராக பொறுப்பேற்றதற்கு புபேந்திர பாய்க்கு வாழ்த்துகள். பல ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். பா.ஜ கட்சி அமைப்பு, அரசு நிர்வாக பணி மற்றும் சமூக சேவை எதுவாக இருந்தாலும்அவரின் முன்மாதிரியான  பணியை நான் பார்த்துள்ளேன். குஜராத்தின் வளர்ச்சி பாதையை அவர் நிச்சயம் வளமாக்குவார். @Bhupendrapbjp

முதல்வராக 5 ஆண்டு காலம் பணியாற்றியபோது, மக்களுக்கு சாதகமான பல நடவடிக்கைகளை விஜய் ரூபானி மேற்கொண்டார். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அவர் அயராது உழைத்தார். வரும் காலங்களிலும், மக்கள் சேவைக்கு அவர் தொடர்ந்து பங்களிப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். @vijayrupanibjp"

*****************(Release ID: 1754521) Visitor Counter : 198