பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆய்வு

Posted On: 12 SEP 2021 5:04PM by PIB Chennai

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும் அசாமில் உள்ள நிறுவனங்களையும் ஊக்குவிப்பதில் வன் தன் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஏகலைவா வித்யாலயா பள்ளிகள் பழங்குடி குழந்தைகளுக்கு உயர்தரமான மற்றும் சீரான கல்வியை வழங்கும்”, என்று மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா குவஹாத்தியில் இன்று தெரிவித்தார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அசாம் சென்றுள்ள அமைச்சர், இன்று மாநில முதல்வர் திரு ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை மாநில விருந்தினர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். மாநிலத்தில் அமல்படுத்தப்படும் பழங்குடி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் (வன உற்பத்தி சிறிய ரகப் பொருட்கள், வன் தன் சுய உதவிக் குழுக்கள் மற்றும் முவ்வுணவுத் திட்டங்கள்) குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் உடனான விரிவான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில அரசின் அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர், டிரைஃபெட் (பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு) அமைப்பின் மேலாண் இயக்குநர் திரு பிரவீர் கிருஷ்ணா மற்றும் இதர அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கூட்டத்தின்போது வன உற்பத்தி சிறிய ரகப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, வன் தன் திட்டம், பழங்குடி மக்களுக்கான பயிற்சி போன்று பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களின் வளர்ச்சிநிலை குறித்து திரு அர்ஜுன் முண்டா ஆய்வு செய்தார்.

பழங்குடி மக்களுக்கு வருவாயை உருவாக்கவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அனைத்து மாநிலங்களிலும் திட்டங்களின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியாவை நோக்கி வளர்ச்சி அடைவதையும், நாடுமுழுவதும் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை முற்றிலும் மாற்றி அமைப்பதையும் இதுபோன்ற பயணங்களும் திட்டங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754345

 

----


(Release ID: 1754363) Visitor Counter : 384