பிரதமர் அலுவலகம்
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் திரு நிகோலாய் பட்ருஷேவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்
Posted On:
08 SEP 2021 8:00PM by PIB Chennai
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் திரு நிகோலாய் பட்ருஷேவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு அமைச்சரை முன்னதாக இன்று அவர் சந்தித்த போது நடைபெற்ற பலனளிக்கும் கருத்து பரிமாற்றங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கிய செயலாளர் திரு பட்ருஷேவ், இந்தியாவுடனான அதன் ‘சிறப்பான மற்றும் மதிப்புமிக்க கூட்டை’ மேலும் ஆழப்படுத்துவதற்கான ரஷ்யாவின் உறுதியை வெளிப்படுத்தினார்.
பிராந்தியத்தில் முக்கிய மாற்றங்கள் நடைபெற்று வரும் வேளையில் செயலாளர் திரு பட்ருஷேவ் தலைமையிலான குழுவின் வருகை குறித்து பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இந்திய-ரஷ்ய கூட்டின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அதிபர் திரு புடினுக்கு தமது நன்றியை தெரிவிக்குமாறு செயலாளர் திரு பட்ருஷேவை பிரதமர் கேட்டுக்கொண்டார். இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வரவுள்ள அதிபர் திரு புடினின் வருகையை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.
(Release ID: 1753373)
Visitor Counter : 237
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam