பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 05 SEP 2021 10:20AM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது பேட்மிண்டன் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணா நாகரின் மாபெரும் சாதனை ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையை தவழச் செய்துள்ளது. தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.

 

----

 


(रिलीज़ आईडी: 1752303) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam