எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டத்தில் செய்ல், ரூர்கேலா எஃகு ஆலை பங்கேற்பு

प्रविष्टि तिथि: 03 SEP 2021 1:06PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டத்தில் செய்ல், ரூர்கேலா எஃகு ஆலை பங்கேற்றது. பிஎஸ்எல் மற்றும் ஆர்எஸ்பி-யின் இயக்குநர் (பொறுப்பு) திரு அமரேந்து பிரகாஷ் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், உடல்நலம் குறித்து அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்றும், அதற்காக தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்றும், எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அவர் கூறினார்.

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடல் நலத்திற்காக ஒதுக்க ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க 75-வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாட்டு மக்களின் உடல் உறுதி மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751656

*****************


(रिलीज़ आईडी: 1751799) आगंतुक पटल : 330
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Punjabi , English , Gujarati , Urdu , Telugu , Kannada