பிரதமர் அலுவலகம்
பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2021 6:01PM by PIB Chennai
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உயரே, உயரே எழும்புகிறீர்கள்! தொடர்சியான, சிறப்பான செயல்திறனுக்கு எடுத்துக்காட்டாக மாரியப்பன் தங்கவேலு திகழ்கிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையைக் கண்டு இந்தியா பெருமையடைகிறது. @189thangavelu #Paralympics #Praise4Para,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1750848)
வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam