இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு தினமான இன்று ‘ஃபிட் இந்தியா கைப்பேசி செயலியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் தொடங்கிவைத்தார்

Posted On: 29 AUG 2021 2:15PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, ‘ஃபிட் இந்தியாஇயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாட, தேசிய விளையாட்டு தினமான இன்று புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில், ‘பிட் இந்தியா கைப்பேசி செயலியை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் தொடங்கி வைத்தார்.

விளையாட்டுத்துறை இணையமைச்சர் திரு நிஷித் பிரமனிக், விளையாட்டுத்துறை செயலாளர் திரு ரவி மிட்டல், இளைஞர் விவகாரத்துறை செயலாளர் திருமதி உஷா சர்மா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  ஃபிட் இந்தியா செயலியை தொடங்கிவைக்கும் முன், மேஜர் தியான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில், ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த்துக்கு மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிஷித் பிரமனிக் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

ஃபிட் இந்தியாசெயலியை தொடங்கி வைத்தபின், அதன் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்த இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங், மல்யுத்த வீரர் சங்ராம் சிங், பத்திரிகையாளர் அயாஸ் மேமன், பைலட் கேப்டன் ஆனி திவ்யா, பள்ளி மாணவர் மற்றும் இல்லத்தரசி ஒருவருடன்  மத்திய அமைச்சர்கள் கணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர்.

பிட் இந்தியா செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இது உள்ளது. அடிப்படை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய இணையமைச்சர் திரு நிஷித் பிரமனிக் பேசுகையில், ‘‘ ஃபிட் இந்தியா இயக்கத்தை, மக்கள் இயக்கமாக்குவதில்நாட்டு மக்களின் பங்களிப்பு வியக்கத்தக்கது.  இந்த ஃபிட் இந்தியா செயலி, புதிய இந்தியாவை உருவாக்கவும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நனவாக்கவும் உதவும். ஃபிட் இந்தியா இயக்கத்துக்கு உண்மையான முன்னுதாரணமாக விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் உள்ளார். அவர் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறார்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750140

*****************

 


(Release ID: 1750170) Visitor Counter : 243