தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இரண்டு நாள் பயணமாக கர்நாடகா செல்கிறார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் திரு எல். முருகன்
இன்று மாலை வருகைதரும் அமைச்சர், மைசூருவில் நாளை ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
प्रविष्टि तिथि:
28 AUG 2021 6:12PM by PIB Chennai
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெறும் விடுதலையின் அம்ருத் மஹோத்சவக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மைசூருவில் புகைப்படக் கண்காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் திரு எல். முருகன் நாளை திறந்து வைப்பார். கர்நாடக மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மைசூரு கள அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இந்த 3 நாள் கண்காட்சி, அகில இந்திய வானொலி வளாகத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மைசூரு அகில இந்திய வானொலியில், நாதாலயா என்ற பிரபல இசைக் கலைஞர்களின் புகைப்பட அரங்கை அமைச்சர் பார்வையிடுவார்.
அகில இந்திய வானொலியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்பு, காலையில், சுட்டூர் மடத்தின் ஜகத்குரு டாக்டர் சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமி அவர்களின் 106-வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்களில் அமைச்சர் கலந்து கொள்வார். அதைத்தொடர்ந்து, மைசூருவில் உள்ள ஜே எஸ் எஸ் கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் கல்லூரியில் சமுதாய வானொலி சேவையை அமைச்சர் திரு எல். முருகன் தொடங்கி வைப்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749939
*****************
(रिलीज़ आईडी: 1749968)
आगंतुक पटल : 230