புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
2005-ம் வருடத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவில் மாசு உமிழ்வு அளவு 28% குறைந்துள்ளது, 2030-ம் ஆண்டுக்கான இலக்கில் 35% ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது
Posted On:
25 AUG 2021 1:00PM by PIB Chennai
2005-ம் வருடத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவில் மாசு உமிழ்வு அளவு 28% குறைந்துள்ளது மற்றும் 2030-ம் ஆண்டுக்கான தேசிய இலக்கில் 35% ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது என்று மத்திய மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரும் சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைவருமான திரு ஆர் கே சிங் கூறினார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஏற்பாடு செய்த ‘இந்திய-சர்வதேச சூரியசக்தி கூட்டணி எரிசக்தி மாற்று கூட்டம்-2021-ல்’ சிறப்புரை ஆற்றிய அவர், பாரிஸ் பருவநிலை மாற்ற (காப்21) உறுதியை தக்கவைத்துள்ள வெகுசில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, தேசிய இலக்கை எட்டுவதோடு மட்டுமில்லாமல், அதை தாண்டியும் சிறப்பாக செயல்பட இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக செயலாளர் திரு இந்து சேகர் சதுர்வேதி மற்றும் சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் மாத்தூர் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஆர் கே சிங், தூய்மை எரிசக்தி துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு சாதகமான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை இந்திய அரசு உருவாக்கியுள்ளது என்று கூறினார்.
பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கடந்த இருபது வருடங்களாக எரிசக்தி சிக்கனத்தை இந்தியா துடிப்புடன் வலியுறுத்தி வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 80 முதல் 85 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748814
-----
(Release ID: 1748995)
Visitor Counter : 289