பிரதமர் அலுவலகம்
திரு கல்யாண் சிங் மறைவுக்கு, பிரதமர் இரங்கல்
Posted On:
21 AUG 2021 10:25PM by PIB Chennai
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், ஆளுநரும் மற்றும் மூத்த தலைவருமான திரு கல்யாண் சிங் ஜி மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது;
‘‘ வார்த்தைகளால் கூறமுடியாத அளவுக்கு நான் வருத்தத்தில் உள்ளேன். கல்யாண் சிங் ஜி... சிறந்த தலைவர், மூத்த நிர்வாகி, அடிமட்ட அளவிலான தலைவர் மற்றும் சிறந்த மனிதர். உத்தரப் பிரதேச வளர்ச்சியில், அவர் அழிக்கமுடியாத பங்களிப்பை விட்டுச் சென்றுள்ளார். அவரது மகன் திரு ராஜ்வீர் சிங்கிடம் பேசி இரங்கல் தெரிவித்தேன். ஓம் சாந்தி.
இந்தியாவின் கலாச்சார மீளுருவாக்கத்தில் அவரது பங்களிப்புக்காக, வரும் தலைமுறையினரும், கல்யாண் சிங் ஜி-க்கு எப்போதும் நன்றியுடன் இருப்பார்கள். இந்திய மதிப்புகளில் உறுதியான பற்று கொண்ட அவர், நமது நூற்றாண்டு மரபுகளில் பெருமிதம் கொண்டார்.
சமூகத்தில் பின்தங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக கல்யாண் சிங் ஜி குரல் கொடுத்தார். விவசாயிகள், இளம்வயதினர் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்கு அவர் ஏராளமான முயற்சிகள் மேற்கொண்டார்.’’ என்று பிரதமர் கூறியுள்ளார்.
****************
(Release ID: 1748087)
Visitor Counter : 182
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam