எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயில் நிறுவனத்தின் ஆலைகளில் பல்வேறு போட்டிகளுடன் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கெண்டாட்டம்

Posted On: 19 AUG 2021 2:07PM by PIB Chennai

எஃகு அமைச்சகத்தின் கீழ் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்திய எஃகு ஆணையகமான செயில், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தைக் குறிக்கும் வகையில் தனது பிலாய் எஃகு ஆலையில் 'இந்தியா@75’ என்ற தலைப்பில் ஓர் வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தியது. ஆலையின் நிர்வாக இயக்குநர் திரு எஸ் கே துபே, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இந்தியா@75’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள கேள்விகளுக்கு பங்கேற்பாளர்கள் விறுவிறுப்பாக பதிலளித்தனர்.

செயில்- விஸ்வேஸ்வரையா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தில் (விஐஎஸ்எல்) சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டுப்பற்று பாடல்களின் இசை  மற்றும் ரங்கோலிப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747337

*****************


(Release ID: 1747372) Visitor Counter : 299