மத்திய அமைச்சரவை

புவியியல் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 AUG 2021 4:15PM by PIB Chennai

புவியியல் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய குடியரசின் சுரங்கங்கள் துறையின் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா மற்றும் அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தின் புவி மற்றும் சுற்றுச்சூழல் துறை, கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி சார்பாக பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

புவியியல் அறிவை மேம்படுத்துதல், புவியியல் தொடர்பான ஆராய்ச்சிகள், ஒத்துழைப்பு திட்டங்களை உருவாக்குதல், தகவல் பரிமாற்றம், பரஸ்பர நலன் சார்ந்த இதர துறைகளில் இணைந்து பணியாற்றுதல் ஆகியவற்றுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

புவியியல் துறையில் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா மற்றும் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு இடையே அமைப்புரீதியான கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746949

------  



(Release ID: 1747020) Visitor Counter : 202