இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக இளைஞர்கள் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வெற்றியாளர்களுடன் மத்திய விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 17 AUG 2021 5:49PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், உலக இளைஞர்கள் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர்களுடன் இன்று (ஆகஸ்ட் 17, 2021) கலந்துரையாடி நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். போலாந்து நாட்டில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில், 8 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களை இந்தியk குழுவினர் வென்றனர்.

அடிமட்ட அளவில் இருக்கும் திறமைகளை வளர்ப்பதற்காக கேலோ இந்தியா போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க  மேற்கொள்ளப்படுவதன் பலன்கள், இதுபோன்ற சாம்பியன்ஷிப் போட்டிகளின் வாயிலாக வெளிப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள ஏராளமான இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவிற்கு பெருமை தேடித் தருவது நமக்கு மிகப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. இளம் வில்வித்தை வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாழ்த்துகள். மூத்த குழுவாக அவர்கள் உயரும் போது, உயர் செயல்திறன் அளவில் போட்டியிடத் தேவையான அனைத்து ஆதரவையும் அவர்கள் பெறுவார்கள்”, என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746733

 

-----  


(रिलीज़ आईडी: 1746770) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Odia , Kannada , Malayalam