குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: நாடு முழுவதும் 75 ரயில் நிலையங்களில் காதி கண்காட்சி மற்றும் விற்பனை
Posted On:
16 AUG 2021 11:25AM by PIB Chennai
விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக, 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள 75 முக்கிய ரயில் நிலையங்களில் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விற்பனையகங்கள், 2022 சுதந்திர தினம் வரை தொடர்ந்து இயங்கும்.
அனைத்து 75 ரயில் நிலையங்களிலும் காதி விற்பனையகங்கள் சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டன. புது தில்லி, மும்பை, பெங்களூரு, எர்ணாகுளம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. துணி வகைகள், ஆயத்த ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், தேன், மண்பாண்டங்கள், உணவுப் பொருட்கள் போன்ற காதி மற்றும் கிராம தொழில் துறையின் பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படும். இந்தக் கண்காட்சியின் மூலம் ரயில் நிலையங்களுக்கு வரும் ஏராளமான பயணிகள் உள்நாட்டு பொருட்களை அதிக அளவில் வாங்குவார்கள். காதி கைவினைஞர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு மிகப்பெரிய சந்தை தளமாகவும் இது அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746274
(Release ID: 1746274)
(Release ID: 1746335)
Visitor Counter : 259