சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
11 AUG 2021 9:31AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ், இதுவரை 51.90 கோடி தடுப்பூசி அளவுகள் செலுத்தப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,86,351 ; கடந்த 140 நாட்களில் இது மிகக் குறைவு
மொத்த தொற்றாளர்களில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.21 விழுக்காடு மட்டுமே; 2020 மார்ச் மாதம் முதல் இதுதான் மிகக் குறைவு
அதிக குணமடையும் விகிதம் எட்டப்பட்டுள்ளது; தற்போது இது 97.45 விழுக்காடு.
இதுவரை 3,12,20,981 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 40,013 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 38,353 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 விழுக்காட்டுக்கும் குறைவு, தற்போது இது 2.34 விழுக்காடு
தினசரி தொற்று உறுதி விகிதம் 2.16 விழுக்காடு; கடந்த 16 நாட்களாக 3 விழுக்காட்டுக்கும் குறைவு
இதுவரை மொத்தம் 48.50 கோடி கொவிட் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744649
•••••
(Release ID: 1744649)
(வெளியீட்டு அடையாள எண்: 1744695)
வருகையாளர் எண்ணிக்கை : 273
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam