பாதுகாப்பு அமைச்சகம்

ரஷ்யாவில் 2021 சர்வதேச இராணுவ விளையாட்டுகளில் இந்திய இராணுவம் பங்கேற்பு

Posted On: 09 AUG 2021 9:56AM by PIB Chennai

இந்த மாதம் (ஆகஸ்ட்) 22ந் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது. இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (ASMC), எல்ப்ரஸ் ரிங், போலார் ஸ்டார், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் உயரமான பகுதி நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகள், பனியில் செயல்பாடுகள், துப்பாக்கி சுடும் திறன்கள், பல்வேறு போட்டிகளில் தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் போர் பொறியியல் திறன்களைக் காட்டும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்பர். திறந்த நீர் மற்றும் பால்கன் வேட்டை விளையாட்டுகளுக்கு இந்த குழுவைச் ருவர் பார்வையாளர்களாக இருப்பர்.  

முன்னதாக, 2019 -ல் ஜெய்சால்மரில் நடந்த ராணுவ சாரணர் மாஸ்டர் போட்டியில் பங்கேற்ற எட்டு நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.

 

***

 (Release ID: 1743916)



(Release ID: 1743974) Visitor Counter : 299