பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தில் ‘பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் போது நிகழ்த்திய உரையின் தமிழ் மொழியாக்கம்
Posted On:
05 AUG 2021 4:42PM by PIB Chennai
வணக்கம்
இன்று உங்களுடன் பேசுவது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. ஏனென்றால் டெல்லியில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு உணவு தானியமும் ஒவ்வொரு பயனாளியின் தட்டையும் சென்றடைகிறது. முந்தைய அரசுகளின் காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஏழைகளுக்கான உணவு தானியங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலை இப்போது இல்லை. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா உ.பி.யில் செயல்படுத்தப்படும் விதம், புதிய உத்தரபிரதேசத்தின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துகிறது. நான் நீங்கள் பேசுவதை மிகவும் ரசித்தேன், உங்கள் தைரியமும் நம்பிக்கையும் திருப்தி அளிக்கிறது, நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. உங்களுக்காக பணிபுரிய இவை எனக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.
தற்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி கர்மயோகியாவார். நமது யோகி ஆதித்யநாத் அவர்களும், உ.பி. அரசின் அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்றத்தில் எனது சக ஊழியர்களும், அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் எனது அன்பு சகோதர சகோதரிகள் உத்தரப்பிரதேசத்தின் மூலை முடுக்கிலும் இன்று அதிக அளவில் திரண்டுள்ள மக்களும் இப்படித்தான்.. இந்தியாவின் வெற்றி தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. இன்றைய ஆகஸ்ட் 5 ஆம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் முக்கியமானதாகவும் மாறிவிட்டது.
வரலாறு இதை பல ஆண்டுகளுக்குப் பதிவு செய்யும். நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 5 அன்று, “ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்” (ஒரே இந்தியா, ஒப்பற்ற இந்தியா) என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது. ஏறத்தாழ எழுபதாண்டுகளுக்குப் பிறகு, 370 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு உரிமையும் வசதியும் ஜம்மு -காஷ்மீரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் அடியை எடுத்து வைத்தனர். அயோத்தியில் ராமர் கோவில் இன்று வேகமாகக் கட்டப்பட்டு வருகிறது. இன்று, ஆகஸ்ட் 5 மீண்டும் நம் அனைவருக்கும் மிகுந்த உற்சாகமூட்டியுள்ளது. இன்று, நாட்டின் இளைஞர்கள் ஒலிம்பிக் மைதானத்தில் நமது தேசிய அடையாளமான ஹாக்கியில் நமது பெருமையை மீட்டெடுத்துள்ளனர். கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்த பொன்னான தருணம் வந்துள்ளது., உ.பி.யில்15 கோடி மக்களுக்காக இன்று செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியும் மிகவும் பெருமைக்குரியது. 80 கோடிக்கும் அதிகமான ஏழை சகோதர, சகோதரிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக உணவு தானியங்களை இலவசமாகப் பெற்று வருகின்றனர்.
சகோதர சகோதரிகளே,
ஒருபுறம், நமது நாடும் நமது இளைஞர்களும் இந்தியாவிற்காக புதிய சாதனைகளை உருவாக்கி, வெற்றிக்காக கோல் அடித்து பெருமை சேர்க்கின்றனர். ஆனால் அதே சமயம், நாட்டில் சிலர் தங்கள் சுயநலத்திற்காக சுய கோல் அடிக்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். நாடு எதை விரும்புகிறது, நாடு என்ன சாதிக்கிறது, நாடு எப்படி மாறுகிறது என்பது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இந்த மக்கள் தங்கள் சுயநலத்திற்காக நாட்டின் நேரத்தை வீணாக்குவதில் மும்முரமாக உள்ளனர். இந்த மக்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக, புனிதமான நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 100 ஆண்டுகளில் முதன்முறையாக ஏற்பட்ட மனிதகுலத்தின் மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சிலர் நாட்டின் வளர்ச்சியை நிறுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்த நாடு தொடர்ந்துஇயங்கிக் கொண்டிருக்கும். நாடாளுமன்றத்தை முடக்க சிலர் முயற்சிக்கின்றனர், ஆனால் 130 கோடி மக்கள் நாட்டை நிறுத்த விடாமல் தொடர்ந்து இயங்கச்செய்து வருகின்றனர்.
நாடு ஒவ்வொரு துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது, ஒவ்வொரு சிரமத்தையும் சவாலாக எடுத்துக் கொள்கிறது. கடந்த சில வாரங்களாக நாடு புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால்டெல்லியில் நாடாளுமன்றத்தை முடக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். சில சாதனைகளைப் பாருங்கள். கடந்த சில வாரங்களில் பதிவுகளைப் பார்த்தால் இந்தியர்களின் திறமையும், வெற்றியும் எல்லா இடங்களிலும் தெரிகிறது. ஒட்டுமொத்த தேசமும் ஒலிம்பிக்கில் (நமது வீரர்களின்) இதுவரை இல்லாத வியக்கத்தகு செயல்திறனை ஆர்வத்துடன் பார்க்கிறது. தடுப்பூசி போடுவதில் இந்தியா 50 கோடி மைல்கல்லின் விளிம்பில் உள்ளது. மிக விரைவில், அது அந்த எண்ணிக்கையைக் கடக்கும். இந்த கொரோனா காலத்தில் கூட, இந்தியர்களின் உத்வேகம், புதிய முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளது.
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அல்லது ஏற்றுமதி என எதுவாக இருந்தாலும், அவை புதிய உயரங்களைத் தொடுகின்றன. ஜூலை மாதத்தில் ரூ 1.16 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல், பொருளாதாரம் வேகமடைவதை நிரூபிக்கிறது. அதே சமயம், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் ஒரு மாதத்திற்கான ஏற்றுமதி இந்த மாதத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு விவசாய ஏற்றுமதியில் உலகின் முதல் 10 நாடுகளில் நாம் இடம் பெற்றிருக்கிறோம். இந்தியா ஒரு விவசாய நாடு என்று கூறப்படுகிறது, ஆனால் இப்போது தான் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பெருமையைப்பறைசாற்றும் உள் , நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மேட் இன் இந்தியா விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த், கடலில் தனது சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இந்தியா லடாக்கில் உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலை அமைக்கும் பணியை முடித்துள்ளது. சமீபத்தில், இந்தியா ஈ-ருபி-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது எதிர்காலத்தில் டிஜிட்டல் இந்தியாவை வலுப்படுத்தும். நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவும்.
நண்பர்களே!
புதிய இந்தியா பதக்கங்களை வென்று உலகை ஆளுகிறது, புதிய இந்தியாவில் முன்னேறுவதற்கான பாதை கடின உழைப்பின் மூலம் நிர்ணயிக்கப்படும். இந்தியாவின் இளைஞர்கள் முன்னேறுவதில் உறுதியாக உள்ளனர்.
நண்பர்களே
இந்த கடினமான நேரத்தில், தனது வீட்டில் ரேஷன் இல்லாத ஒரு ஏழை கூட இல்லை என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
நண்பர்களே
இந்தப் பெருந்தொற்றுநோய் கடந்த நூறு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நெருக்கடி மட்டுமல்ல, அது உலகின் பல கோடிக்கணக்கான மக்களை, முழு மனித இனத்தையும் பல முனைகளில் துயரத்தில் மூழ்கடித்துள்ளது. ஆனால் இன்று இந்தியாவும் அதன் ஒவ்வொரு குடிமகனும் இந்த பெருந்தொற்றை முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுகிறார்கள். மருத்துவ சேவைகள் தொடர்பான உள்கட்டமைப்பு, உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி இயக்கம், இந்தியர்களை பட்டினியிலிருந்து காப்பாற்றும் மிகப்பெரிய இயக்கம் என எதுவாக இருந்தாலும் அவற்றை இந்தியா வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது. இந்த தொற்றுநோய் நெருக்கடியின் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பாளர்கள் மற்றும் மிகப்பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நிறுத்துவதற்கு இந்தியா அனுமதிக்கவில்லை. உ.பி.யில் நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள், பாதுகாப்பு வழித்தடங்கள் போன்ற திட்டங்கள் முன்னேறி வருகின்றன.
நண்பர்களே
இத்தகைய நெருக்கடி ( நாம் இதை கட்டுப்படுத்தி வருகிறோம்) இருந்தபோதிலும், உணவுப் பொருட்களின் விலை -- ரேஷன் முதல் மற்ற உணவுப் பொருட்கள் வரை, உலகம் முழுவதும் மிகவும் மோசமான சூழலே நிலவுகிறது . இங்கு இந்தியாவில்,இந்த நிலையை மாற்ற நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என்று ஏழை, நடுத்தர வர்க்க சகோதர சகோதரிகளுக்கு உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன்இது சாத்தியப்படும். கொரோனா காலத்தில் கூட, விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் முழு எச்சரிக்கையுடன் தொடர்ந்தன. விதைகள், உரங்களை வாங்குதல், விளைபொருட்களை விற்பனை செய்தல் ஆகியவற்றின் போது விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க சரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக, எங்கள் விவசாயிகள் சாதனை உற்பத்தி செய்தனர். மேலும் அவர்களின் தயாரிப்புகளை எம்எஸ்பி குறைந்த பட்ச ஆதரவு விலையில் வாங்குவதில் அரசாங்கம் புதிய பதிவுகளை நிறுவியது. நமது யோகி அவர்களின் அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக எம்எஸ்பி -யில் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனைகளைச் செய்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோதுமை மற்றும் நெல் கொள்முதலில் எம்எஸ்பி மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. உ.பி.யின் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக 24,000 கோடி ரூபாய் அளவுக்கு விளைச்சலுக்கான வருவாய் பெற்றுள்ளன.
மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் அரசாங்கம் என இரட்டை இயந்திர அரசாங்கம் சாதாரண மக்களின் வசதிக்காக மற்றும் அதிகாரமளிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று இருந்தபோதிலும் ஏழைகளுக்கு வசதிகளை வழங்கும் இயக்கம் குறையவில்லை. இதுவரை, 17 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு உ.பி.யில் நிரந்தர வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் வீட்டில் கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளும், லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. உ.பி.யில் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்கும் பணி துரித வேகத்தில் முன்னேறி வருகிறது. உ.பி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 27 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது.
சகோதர சகோதரிகளே,
பிரதமர் ஸ்வநிதி திட்டமும் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். . மிகக்குறுகிய காலத்தில், இந்த திட்டத்தின் கீழ் உ.பி.யில் உள்ள சுமார் 10 லட்சம் பேருக்கு நன்மைகளை வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
சிலர் உத்தரப்பிரதேசத்தை அரசியலின் மையமாக மட்டுமே நினைத்தனர். தங்கள் குடும்பத்தின் நலன்களுக்காக உ.பி.யை பயன்படுத்தினர். இந்த மக்களின் குறுகிய அரசியலின் காரணமாக, இந்தியாவின் இவ்வளவு பெரிய மாநிலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் பல காலம் இணைக்கப்படவில்லை. சிலர் பணக்காரர்களாக ஆனார்கள், சில குடும்பங்கள் முன்னேறின. ஆனால் இவர்கள் மாநிலத்தை வளப்படுத்தவில்லை. ஆனால். இன்று உத்தரப்பிரதேசம் அத்தகையவர்களின் தீய வட்டத்திலிருந்து வெளியேறி முன்னேறி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இரட்டை எஞ்சின் அரசாங்கம், உ.பி.யின் திறனை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்தின் சக்தி மையமாக உத்தரப்பிரதேசம் மாற முடியும் என்ற நம்பிக்கை கடந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. உபி வரலாற்றில் முதல் முறையாக, சாதாரண இளைஞர்களின் கனவுகள் பேசப்படுகின்றன. உ.பி வரலாற்றில் முதல் முறையாக, குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தின் சூழல் வெளிப்படையாகத் தோன்றியுள்ளது. உ.பி வரலாற்றில் முதல் முறையாக, ஏழைகளைத் துன்புறுத்துபவர்கள், பலவீனமான பிரிவினரை அச்சுறுத்துபவர்கள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களின் மனதில் பயம் நிலவுகிறது.
ஊழலுக்கும், முகஸ்துதிபாடுதலுக்கும் அடிமையாக இருந்த ஒரு அமைப்பில் அர்த்தமுள்ள மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று உ.பி.யில் ஒவ்வொரு பைசாவும் பொதுமக்களின் கணக்குகளை நேரடியாகச் சென்றடையும் என்பது உறுதி செய்யப்படுகிறது, இன்று உத்தரப்பிரதேசம் முதலீட்டின் மையமாக மாறி வருகிறது. பெரிய நிறுவனங்கள் உ.பி.க்கு வர ஆர்வமாக உள்ளன. உ.பி.யில் உள்கட்டமைப்பின் மெகா திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, தொழில்துறை தாழ்வாரங்கள் கட்டப்பட்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
சகோதர சகோதரிகளே,
உத்தரப்பிரதேசத்தின் கடின உழைப்பாளி மக்கள் சுயசார்பு இந்தியாவை, வளமான இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு பெரிய அடிப்படையாக அமைக்கிறார்கள். இன்று நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். இது இனி வரும் 25 ஆண்டுகளில் அடைவதற்கான பெரிய குறிக்கோள்களுக்கான வாய்ப்பாகும். இம்மாநில இளைஞர்கள், நமது மகள்கள், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்காமல், அவர்களின் போதுமான பங்கேற்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. “சப்கா சாத், சப்கா விகாஸ் சப்கா விஸ்வாஸ்” என்பதையே மந்திரமாகக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில், கல்வி தொடர்பான இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவினால் உத்தரப்பிரதேசம் பெரும் பயனடையும். முதல் முடிவு பொறியியல் படிப்பு தொடர்பானது. உ.பி.யின் கிராமங்கள் மற்றும் ஏழைகளின் குழந்தைகள் மொழிப் பிரச்சினையால் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை பெருமளவில் இழந்தனர். இப்போது இந்த நிலை இல்லை. இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது. சிறந்த படிப்புகள் மற்றும் பாடத்திட்டம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் இந்த வசதியை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
சகோதர சகோதரிகளே,
மற்றொரு முக்கியமான முடிவு மருத்துவக் கல்வி தொடர்பானது. மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் எல்லைக்கு வெளியே வைக்கப்பட்டனர். இந்த நிலையை மாற்றி, இந்த ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) களுக்கு நமது அரசு சமீபத்தில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடும் இதிலிருந்து ஒதுக்குவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் முன்னேற ஊக்குவிக்கப்படுகிறது. ஏழைகளின் குழந்தைகள் மருத்துவர்களாக மாற இது வழி வகுக்கிறது.
சகோதர சகோதரிகளே,
சுகாதாரத் துறையிலும், உத்தரப்பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத பணிகள் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4-5 வருடங்களுக்கு முன்பு கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோய் இருந்திருந்தால் உ.பியின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? அப்போது ஜலதோஷம், காய்ச்சல், காலரா போன்ற நோய்களும் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலை நிலவியது. இன்று, உத்தரப்பிரதேசம் சுமார் 5.25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் மைல்கல்லை எட்டிய முதல் மாநிலமாக உள்ளது. அதுவும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பற்றி குழப்பம் பரவி பொய்யான பிரச்சாரம் சிலரால் பரப்பப்பட்டது.
ஆனால் உத்தரப்பிரதேசத்தின் விவேகமுள்ள மக்கள் ஒவ்வொரு பொய்யையும் நிராகரித்தனர். உத்தரப்பிரதேசம் அனைவருக்கும் இலவச தடுப்பூசி இயக்கத்தை விரைவான வேகத்தில் எடுத்துச் செல்லும்; முகக் கவசங்கள் அணிதல்; சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய விதிகளைத் தளர்த்தாது என நான் உறுதியாகக் கருதுகிறேன். “ பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் திருவிழாக்கள் இருக்கும். தீபாவளிக்கு முன் பல பண்டிகைகள் உள்ளன. எனவே, தீபாவளி வரை இலவச ரேஷன் தொடரும் என்று முடிவு செய்துள்ளோம், நமது ஏழைக் குடும்பங்கள் யாரும் இந்த விழாக்காலங்களில் கஷ்டப்படக்கூடாது. வரவிருக்கும் அனைத்து விழாக்களுக்கும் நான் மீண்டும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆரோக்கியமாக இருங்கள், உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கட்டும். மிக்க நன்றி !!
பொறுப்பு துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. நிகழ்ச்சி நடைபெற்ற போது உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***************
(Release ID: 1743389)
Visitor Counter : 264
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada