இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கடந்த 3 வருடங்களில் 189 விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்கள், 360 கேலோ இந்தியா மையங்கள், 24 மாநில சிறப்பு மையங்கள் மற்றும் 160 பயிற்சி நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: திரு அனுராக் சிங் தாகூர் புதுதில்லி, ஆகஸ்ட்
प्रविष्टि तिथि:
05 AUG 2021 2:39PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
கேலோ இந்தியா திட்டம், தேசிய விளையாட்டு விருதுகள், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய விளையாட்டு நல நிதி உள்ளிட்ட திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
விளையாட்டு என்பது மாநில அரசுகளின் பொறுப்பில் வரும் நிலையில், அவர்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவிகளை வழங்கி வருகிறது.
கடந்த 3 வருடங்களில் 189 விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்கள், 360 கேலோ இந்தியா மையங்கள், 24 மாநில சிறப்பு மையங்கள் மற்றும் 160 பயிற்சி நிலையங்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மைய திட்டத்தின் கீழ் விளையாட்டு அறிவியல் துறைகள் மற்றும்
விளையாட்டு மருத்துவ துறைகளை அமைப்பதற்கு ஆறு பல்கலைக்கழங்கள்/கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐந்து மருத்துவ கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழங்கள்/கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகளால் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு இது வரை ரூ 62.61 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சிறந்து விளங்கும் வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட ஆராய்ச்சி, கல்வி மற்றும் புதுமைகளுக்கு ஆதரவளிப்பதே விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மைய திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742707
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742706
-----
(रिलीज़ आईडी: 1742894)
आगंतुक पटल : 243