பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிதியுதவியை அறிவித்தார்

Posted On: 04 AUG 2021 8:22PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.

"மேற்கு வங்கத்தில் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும்," என்று பிரதமர் அலுவலக டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

----


(Release ID: 1742529) Visitor Counter : 212