பிரதமர் அலுவலகம்

மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளில் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றி வருகிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 04 AUG 2021 1:23PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கு மாநில அரசுடன், மத்திய அரசு இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகானுடன் பிரதமர் பேசி, அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.

மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக, மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகானுடன் பேசி, நிலவரம் தொடர்பாகக் கேட்டறிந்தேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1742255) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam