கலாசாரத்துறை அமைச்சகம்

கலாச்சார வளர்ச்சி அறிவியல் திட்டத்தின் கீழ் புதிய அறிவியல் மையங்கள் அமைக்க 14 திட்டங்கள் : திரு ஜி.கிஷன் ரெட்டி தகவல்

Posted On: 02 AUG 2021 3:55PM by PIB Chennai

கலாச்சார வளர்ச்சி அறிவியல் திட்டத்தின் கீழ் புதிய அறிவியல் மையங்கள் அமைக்க, 14 திட்டங்களை மத்திய கலாச்சார அமைச்சகத்தின்  அறிவியல் அருங்காட்சிய தேசிய கவுன்சில் மேற்கொள்கிறது என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்  திரு ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நாடு முழுவதும் அறிவியல் நகரங்கள் உட்பட  அறிவியல் அருங்காட்சியங்கள் மற்றும் அறிவியல் மையங்களை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் அறிவியல் அருங்காட்சியக தேசிய கவுன்சில் (NCSM) உருவாக்கியுள்ளது.

* அறிவியல் அருங்காட்சியக தேசிய கவுன்சில் (NCSM)-ன் கீழ்நாட்டில்  தற்போது  25 அறிவியல் அருங்காட்சியங்கள் / அறிவியல் மையங்கள் உள்ளன.

* மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் 4 புதிய அறிவியல் மைய திட்டங்களுக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கலாச்சார வளர்ச்சி அறிவியல் திட்டத்தின் கீழ் புதிய அறிவியல் மையங்கள் அமைக்க 14 திட்டங்கள், அறிவியல் அருங்காட்சியக தேசிய கவுன்சில்(என்சிஎஸ்எம்) மேற்கொண்டுள்ளது. இவற்றின் பட்டியல் இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது 25 அருங்காட்சியகங்கள் / அறிவியல் மையங்கள், அறிவியல் அருங்காட்சியக தேசிய கவுன்சில் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

என்சிஎஸ்எம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து 22 அறிவியல் மையங்களை ஏற்படுத்தி, அதை அந்தந்த மாநிலங்களிடம் ஒப்படைத்துள்ளன.

நேதாஜியின் 125வது பிறந்த நாள் வீரதீர நாளாக அறிவிப்பு:

நோதாஜியின் 125 பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக பல திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

* நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம், புது தில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது.

* ஜனவரி 23ம் தேதியை வீரதீர நாளாக அறிவிக்கும்  உத்தரவு அரசாணையில் வெளியிடப்பட்டது.

* நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த ஆண்டை மத்திய அரசு கொண்டாடுகிறது. இதன் தொடக்கவிழா, கொல்கத்தா விக்டோரியா நினைவு அரங்கில் கடந்த ஜனவரி23ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்கு மாண்பு மிகு பிரதமர் தலைமை தாங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741488

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741484

*****************(Release ID: 1741623) Visitor Counter : 240