உள்துறை அமைச்சகம்

மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான திரு மோடி அரசின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்பு

Posted On: 29 JUL 2021 7:08PM by PIB Chennai

மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் முடிவை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்றுள்ளார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, “மருத்துவக் கல்வித் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை (முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்) படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம், பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் நலனுக்கான அரசின் உறுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார். திரு மோடி அரசின் இந்த முடிவின் மூலம் சுமார் 5,500 மாணவர்கள் பலனடைவார்கள்,” என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடும், நடப்பு 2021-22 கல்வி ஆண்டில் இருந்து அனைத்து இளநிலை/முதுநிலை மருத்துவ/பல் மருத்துவ படிப்புகளுக்கும் அகில இந்திய பிரிவில் நீட்டிக்கப்படுகிறது.

*****************



(Release ID: 1740433) Visitor Counter : 226