விண்வெளித்துறை

2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 28 JUL 2021 12:05PM by PIB Chennai

இயல்பான பணிகள் இனி மேற்கொள்ளப்படும் என்ற அனுமானத்தில், 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில், சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினார்.

சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்குவதில் கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், துணை அமைப்புமுறைகளின் நடைமுறையாக்கம், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை மற்றும் பூமியின் மீது அமைப்புமுறை செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன. இந்தத் திட்டத்திற்கான பணிகள் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்தது. எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொதுமுடக்கத்தின் போதும் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்படத் தொடங்கியது முதல், சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியதுடன்முதிர்ச்சியான நிலையில் இந்தப் பணிகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739777

*****

(Release ID: 1739777)


(Release ID: 1739794) Visitor Counter : 341