பிரதமர் அலுவலகம்

உலகப் பாரம்பரிய இடமாக, தோலாவிரா-வை யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

Posted On: 27 JUL 2021 5:37PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர  மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்இது கண்டிப்பாக காணவேண்டிய இடம், குறிப்பாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியலில் ஆர்வமுள்ளவர்கள்  காண வேண்டிய இடம் என அவர் கூறியுள்ளார்.

யுனெஸ்கோவின் சுட்டுரைக்கு, பதில் அளித்த பிரதமர் கூறியிருப்பதாவது: ‘‘இந்த செய்தியால் முற்றிலும் மகிழ்ச்சியடைந்தேன்.

தோலாவிரா முக்கியமான நகர்ப்புற மையமாக இருந்தது. நமது பழங்காலத்துடன் மிக முக்கிய தொடர்புகளைக் கொண்டவைகளில் ஒன்றாக உள்ளது. இது கண்டிப்பாகக் காண வேண்டிய இடம், குறிப்பாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு.

மாணவப் பருவத்தில், நான் முதன் முதலாக தோலாவிரா சென்றேன். அந்த இடம் என் மனதைக் கவர்ந்தது.

குஜராத் முதல்வராக, தோலாவிராவை பாரம்பரிய இடமாகப் பாதுகாப்பது மற்றும் புனரமைப்பது தொடர்பானப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றேன்இங்கு சுற்றுலாவுக்கு ஏற்ற உள்கட்டமைப்புகளை உருவாக்க நமது குழுவும் பணியாற்றியது.’’

 

----



(Release ID: 1739625) Visitor Counter : 265