ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மருத்துவ உபகரணங்களின் வர்த்தக எல்லை நிர்ணயம்: 91% நிறுவனங்களின் விலை 88% வரை குறைவு

Posted On: 24 JUL 2021 11:53AM by PIB Chennai

மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக எல்லையை ஜூலை 13 தேதியிட்ட அறிவிக்கையில்  தேசிய மருந்து விலை ஆணையகம் (என்பிபிஏ) நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து உபகரணங்கள் பின்வருமாறு:

1.       பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

2.       ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம்

3.       நெபுலைசர்

4.       மின்னணு வெப்பமானி

5.       க்ளூகோமீட்டர்

விநியோகஸ்தர்களுக்கான விலையில் 70% வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 23, 2021 வரை இதுபோன்ற மருத்துவ உபகரணங்களில் மொத்தம் 684 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. விற்பனை விலை சரிந்துள்ளதாக 620 நிறுவனங்கள் (91%) தெரிவித்துள்ளன.

அதிகபட்சமாக, இறக்குமதி செய்யப்படும் பல்ஸ் ஆக்சிமீட்டரின் விலை ஒரு அலகிற்கு ரூ. 2,95,375 ஆகக் குறைந்துள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட விற்பனை விலை ஜூலை 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதால் இதனைத் தீவிரமாக கண்காணித்து முறைப்படுத்துமாறு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான உத்தரவுகள் என்பிபிஏ-வின் இணையதளத்தில் (www.nppa.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற மருத்துவ உபகரணங்களின் இருப்பை கண்காணிப்பதற்காக பொருட்களின் இருப்பு குறித்த காலாண்டு தகவல்களை சமர்ப்பிக்குமாறு தயாரிப்பாளர்கள்/ இறக்குமதியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738484

*****************



(Release ID: 1738588) Visitor Counter : 186