நிதி அமைச்சகம்
டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஐ.நா.வின் உலகளாவிய ஆய்வு: இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
Posted On:
23 JUL 2021 8:49AM by PIB Chennai
டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) நடத்திய உலகளாவிய ஆய்வில், இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்-ஐ பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்ததால், இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. இதன் முடிவுகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
(https://www.untfsurvey.org/economy?id=IND).
143 நாடுகளின் பொருளாதாரங்களை மதிப்பீடு செய்தபின், 2021ம் ஆண்டு கணக்கெடுப்பில் கீழ்கண்ட 5 முக்கிய விஷயங்களில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கவகையில் உள்ளது.
1. வெளிப்படைத்தன்மை: 2021ம் ஆண்டில் 100 சதவீதம் ( 2019ம் ஆண்டில் 93.33 சதவீதம்)
2. முறைகள்: 2021ம் ஆண்டில் 95.83 சதவீதம் (2019ம் ஆண்டில் 87.5 சதவீதம்)
3. நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு: 2021ம் ஆண்டில் 88.89 சதவீதம் ( 2019-ல் 66.67 சதவீதம்)
4. காகிதமில்லா வர்த்தகம்: 2021ம் ஆண்டில் 96.3 சதவீதம் (2019ம் ஆண்டில் 81.48 சதவீதம்)
5. நாடுகள் தாண்டிய வர்த்தகம்: 2021-ல் 66.67 சதவீதம் ( 2019-ல் 55.56 சதவீதம்).
தெற்கு மற்றும் தென்மேற்கு ஆகிய நாடுகள்(63.12 சதவீதம்) மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள்(63.12 சதவீதம்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருப்பதை கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(OECD) உறுப்பினராக உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சராசரியைவிட அதிகமாக உள்ளது.
வெளிப்படைத்தன்மை விஷயத்தில் இந்தியா 100 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. வர்த்தகத்தில் பெண்கள் என்ற பிரிவில் 66 சதவீத மதிப்பெண்-ஐ இந்தியா பெற்றுள்ளது.
விரைவு சுங்க நடவடிக்கையின் கீழ், முகமில்லா, காகிதம் இல்லா, தொடர்பில்லா சுங்க நடவடிக்கைகள் போன்ற புதுமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்ததில் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்(CBIC) முன்னணியில் உள்ளது. இதன் நேரடி தாக்கம், டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஐ.நா.வின் மதிப்பில் பிரதிபலித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737948
-----
(Release ID: 1738118)
Visitor Counter : 306