பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு: வீரதீர விருதுகள் இணையதளம் மற்றும் என்சிசி இணைந்து தனித்துவமான நடவடிக்கை

Posted On: 14 JUL 2021 3:51PM by PIB Chennai

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை குறிக்கும் வகையில், வீரதீர விருதுகள் இணையதளம் மற்றும் என்சிசி ஆகியவை இணைந்து தனித்துவமான திட்டத்தை தொடங்கியுள்ளன. பாதுகாப்பு படையில் வீர தீர விருதுகள் பெற்றவர்கள், நாட்டுக்கான சேவையில் உன்னத தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் கீழ், வீர தீர செயல்கள் புரிந்தவர்களின் சிலைகளை என்சிசி மாணவர்கள் தத்தெடுத்து, சுத்தம் செய்து, போர் வீரர்களின் பங்களிப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். சொற்பொழிவுகள், கவிதை, நாடகம் மற்றும் நடனம் மூலம் தேசிய தலைவர்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை பரப்புகின்றனர். 

தற்போது வரை என்சிசி மாணவர்கள் வீர தீர விருதுகள் பெற்ற 46 பேரின் சிலைகளை தத்தெடுத்துள்ளனர். என்சிசி மாணவர்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வீர தீர விருதுகள் இணையதளம் https://www.gallantryawards.gov.in/ முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்க முடியும்.

என்சிசி மாணவர்களின் முதல் நிகழ்ச்சி பரிசோதனை அடிப்படையில் கடந்த 7ம் தேதி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அடுத்த நிகழ்ச்சி கேரளாவின் கொச்சியில் திருபுனித்தாரா என்ற இடத்தில் உள்ள லெப்டினன்ட் கர்னல் ராமகிருஷ்ணன் விஸ்வநாதன் சிலைக்கு என்சிசி மாணவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர். இவர் வீர சக்கரா விருது பெற்றவர்.   என்சிசி மாணவர்களின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரின் ஊக்குவிப்பையும் பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735369

*****************(Release ID: 1735553) Visitor Counter : 664