மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வி அமைச்சகத்தின் மின்னணு கல்வி முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆய்வு
Posted On:
13 JUL 2021 1:27PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பிரதமரின் இ-வித்யா, தேசிய மின்னணு கல்வி கட்டமைப்பு, ஸ்வயம் போன்ற கல்வி அமைச்சகத்தின் மின்னணு கல்வி முன்முயற்சிகள் பற்றி ஆய்வு செய்தார். இணை அமைச்சர்கள் திருமதி அன்னபூர்ணா தேவி, திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங், டாக்டர் சுபாஷ் சர்கார் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்த முன்முயற்சிகள் பற்றி அமைச்சர்களுக்கு விளக்கமளித்தனர்.
கல்வித்துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு பிரதான், திறந்த, உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய கல்வி ஆகிய இலக்குகளை அடைவதற்கு தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் என்றார். கல்வித்துறையில் துடிப்புமிக்க மின்னணு சூழலியல், மாணவர்களுக்கு கற்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவிற்கு வித்தாகவும் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 பெருந்தொற்று, கல்வியை மின்னணு வாயிலானதாக மாற்றியிருப்பதாகவும், கல்வி இடையறாது வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சகம் மேற்கொண்டு வரும் மின்னணு முன்முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735023
*****
(Release ID: 1735023)
(Release ID: 1735041)
Visitor Counter : 258
Read this release in:
English
,
Telugu
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam