பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சராக திரு ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
12 JUL 2021 12:30PM by PIB Chennai
மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சராக திரு ராவ் இந்தர்ஜித் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திரு ராவ் இந்தர்ஜித் சிங், ஏற்கனவே மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் மற்றும் திட்டத் துறை இணை அமைச்சராகவும் (தனிப் பொறுப்பு) பொறுப்பு வகிக்கிறார்.
ஹரியானாவின் குருகான் தொகுதியிலிருந்து 17-வது மக்களவைக்கு திரு சிங் தேர்வு செய்யப்பட்டார். ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் வகிக்கிறார். சுமார் 40 ஆண்டுகளாக பொதுச் சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திரு சிங், இதற்கு முன்னர் ஹரியானாவின் சட்டமேலவை உறுப்பினராகவும், மாநில அரசின் அமைச்சராகவும் பணியாற்றினார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், எல்எல்.பி-யும் படித்தார். 71 வயதான திரு சிங் வழக்கறிஞராகவும், வேளாண் வல்லுநராகவும் செயல்படுவதுடன், அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
திரு சிங், கடந்த 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் கலந்துகொண்ட வீரரான திரு ராவ் துலா ராமின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734749
*****
(Release ID: 1734749)
(रिलीज़ आईडी: 1734765)
आगंतुक पटल : 283