தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக திரு அனுராக் தாகூர் பொறுப்பேற்பு

Posted On: 08 JUL 2021 12:04PM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக திரு அனுராக் தாகூர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என்றும் கூறினார். பிரதமர் தமக்கு அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் இதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திரு தாகூர் கேட்டுக்கொண்டார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அமித் காரே, அமைச்சருக்கு அவரது அறையில் வரவேற்பு அளித்தார். பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் பிரசார் பாரதியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அனைத்து ஊடகங்களின் தலைவர்களுடன் குழுவாக இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733587

*****

 (Release ID: 1733587)


(Release ID: 1733618) Visitor Counter : 287