பிரதமர் அலுவலகம்
மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
07 JUL 2021 8:52PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட தனது சக அமைச்சர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களின் பதவிக்காலம் மிகச் சிறப்பாக அமையவும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட எனது சகாக்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பதவிக்காலம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். மக்களின் அனைத்து விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும், வலுவான, வளமான இந்தியாவை கட்டமைக்கவும் நாம் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்போம்” என்று கூறியுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1733566)
आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam