பிரதமர் அலுவலகம்

இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திரு.வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 JUL 2021 9:37AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திரு.வீரபத்ர சிங் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “நிர்வாகத்திலும், சட்டமன்ற விவகாரங்களிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவரான திரு.வீரபத்ர சிங் அவர்களின் அரசியல் பயணம் மிக நீண்டது. இமாச்சலப் பிரதேசத்தின் நலனுக்காக அவர் முக்கியப் பங்காற்றினார். அம்மாநில மக்களுக்காக அயராது உழைத்தார். அவரது மறைவால் நான் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்திஎன்று தெரிவித்துள்ளார்.

 

 

***


(Release ID: 1733562) Visitor Counter : 168