சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
35 கோடி: இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை
Posted On:
04 JUL 2021 9:48AM by PIB Chennai
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 35 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 46,04,925 முகாம்களில் 35,12,21,306 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 7-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,85,350 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.59 சதவீதமாகும்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,183 சரிந்துள்ளது.
தொடர்ந்து 52-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 52,299 பேர் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 9,228 பேர் குணமடைந்தனர்.
இதுவரை மொத்தம் 2,96,58,078 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,38,490 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,82,54,953 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.44 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.34 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 27 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732583
*****************
(Release ID: 1732610)
Visitor Counter : 343
Read this release in:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam