சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல்: பொய்களும் உண்மைகளும்

Posted On: 01 JUL 2021 4:41PM by PIB Chennai

இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் கொள்கை வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை புறக்கணிக்கிறது என்றும், பணக்காரர்களுக்கு மட்டுமே பலனளிக்கிறது என்றும் சில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

அறிவியல் மற்றும் நோயியல் ஆதாரங்கள் அடிப்படையிலான கொவிட் தடுப்பு மருந்து வழங்கல் திட்டம், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் உள்ளிட்டோரை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கிறது.

பதிவு பெற்ற சுகாதார பணியாளர்களில் 87.4 சதவீதம் பேரும், முன்கள பணியாளர்களில் 90.8 சதவீதம் பேரும் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலை தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள இவர்கள் பாதுகாக்கப்பட்டு, இந்த அணுகல் முறை பயனளித்து வருகிறது.

45 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 45.1 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 49.35 சதவீதம் பேருக்கு இது வரை முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டைகள் இல்லாத பல்வேறு மதங்களை சேர்ந்த சாதுக்கள் உள்ளிட்ட நாடோடிகள், கைதிகள், மனநல மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவோர், முதியோர் இல்லங்களில் இருப்போர், பிச்சைக்காரர்கள், மறுவாழ்வு மையங்களில் இருப்போர் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான தேவையை இந்திய அரசு உணர்ந்துள்ளது.

சிறுபான்மையினர் விவகாரங்கள், சமுக நீதி மற்றும் சமூக நலம் உள்ளிட்ட தொடர்புடைய அரசு துறை, அமைப்புகளின் உதவியோடு இத்தகையோரை மாவட்ட பணிக்குழு அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731931

-----


(Release ID: 1732522) Visitor Counter : 241