சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தொற்றின் அண்மை தகவல்

Posted On: 29 JUN 2021 9:13AM by PIB Chennai

இந்தியாவில், 102 நாட்களுக்குப் பிறகு அன்றாட புதிய பாதிப்புகள் 40,000க்கும் குறைவாக பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 37,566 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 5,52,659-ஆகக் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.82 விழுக்காடு மட்டுமே.

இதுவரை மொத்தம் 2,93,66,601 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 56,994 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து 47-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேசியளவில் குணமடைவோர் விகிதம் 96.87 விழுக்காடாக கூடியுள்ளது.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 5 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது; தற்போது இது 2.74% ஆகும்.

தொடர்ந்து 22-வது நாளாக, அன்றாட பாதிப்பு வீதம் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக, 2.12 சதவிகிதமாக உள்ளது.

இதுவரை 40.81 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 32.90 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731055

                                                                                                                             ***



(Release ID: 1731121) Visitor Counter : 198