பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்ம ராவின் 100-வது பிறந்தநாளில் பிரதமர் அன்னாருக்கு புகழாரம்

प्रविष्टि तिथि: 28 JUN 2021 9:32AM by PIB Chennai

 

முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்ம ராவ் அவர்களின் 100-வது பிறந்த நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்ம ராவ் அவர்களின் 100-வது பிறந்த தினத்தில் அன்னாருக்கு எனது புகழஞ்சலிகள். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் அளித்த விரிவான பங்களிப்பை இந்தியா நினைவுகூர்கிறது. தலைசிறந்த அறிவு மற்றும் புத்திக்கூர்மையை அவர் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாத மனதின் குரல் நிகழ்ச்சியின்போது அவரைப் பற்றி நான் பேசியிருந்ததை பகிர்ந்து கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1730846) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam