நிதி அமைச்சகம்

வருமான வரி இணக்கங்களுக்கான கடைசி தேதிகளை அரசு மேலும் நீட்டிப்பு

Posted On: 25 JUN 2021 6:51PM by PIB Chennai

வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள இணக்கங்களுக்கான கடைசி தேதிகளை அரசு மேலும் நீட்டித்துள்ளது. கொவிட்-19 சிகிச்சைக்கான செலவு மற்றும் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட இறப்புக்கு பெறப்பட்ட உதவித் தொகைக்கான வரி விலக்கையும் அது அறிவித்துள்ளது. விவரங்கள் வருமாறு:

அ. வரி விலக்கு

1. கொவிட்-19 சிகிச்சைக்கு ஏற்பட்ட செலவுகளை எதிர்கொள்வதற்காக தங்களது நிறுவனங்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து நிதி உதவியை வரி செலுத்துவோர் பலர் பெற்றிருக்கின்றனர். நிதி ஆண்டு 2019-20 மற்றும் அதை தொடர்ந்து வரும் வருடங்களில் இவ்வாறு பெறப்பட்ட பணத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2.  கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் நலம் விரும்பிகள் நிதி உதவியை வழங்கி உள்ளார்கள். நிதி ஆண்டு 2019-20 மற்றும் அதை தொடர்ந்து வரும் வருடங்களில் இவ்வாறு பெறப்பட்ட பணத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆ. கடைசி தேதி நீட்டிப்பு

கொவிட்-19 காரணமாக வரி செலுத்துவோர் வரி இணக்கங்களை மேற்கொள்வதில் சிரமங்களை சந்திப்பதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1730355

*****************


(Release ID: 1730398) Visitor Counter : 429