பிரதமர் அலுவலகம்
அவசரநிலையை எதிர்த்தவர்களை பிரதமர் நினைவு கூர்ந்தார்
நாட்டின் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த சாத்தியமான அனைத்தையும் செய்வோம் என்றும் நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மாண்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் எனவும் நாம் உறுதி ஏற்போம் : பிரதமர்
प्रविष्टि तिथि:
25 JUN 2021 10:52AM by PIB Chennai
அவசர நிலையை எதிர்த்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்த சிறந்த தலைவர்கள் அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
அவசர நிலையை அனுசரிப்பதை முன்னிட்டு டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் பிரதமர் கூறியதாவது.
‘‘ அவசரநிலையின் கருப்பு நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது. 1975 முதல் 1977ம் ஆண்டு வரையிலான காலம் , அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை கண்டது.
நாட்டின் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த சாத்தியமான அனைத்தையும் செய்வோம் எனவும் நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் எனவும் நாம் உறுதி ஏற்போம்.
நமது ஜனநாயக நெறிமுறைகளை காங்கிரஸ் இப்படித்தான் நசுக்கியது. அவசரநிலையை தடுத்து இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்த அனைத்து சிறந்த தலைவர்களையும் நாம் நினைவு கூர்கிறோம்.’’
https://instagram.com/p/CQhm34OnI3F/?utm_medium=copy_link
*****************
(रिलीज़ आईडी: 1730271)
आगंतुक पटल : 294
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam