வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஸ்மார்ட் நகரங்கள் திட்டம், அம்ருத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் ஆகியவற்றின் 6வது ஆண்டு விழா, நாளை காணொலி வாயிலாக கொண்டாட்டம்

Posted On: 24 JUN 2021 2:46PM by PIB Chennai

ஸ்மார்ட் நகரங்கள் திட்டம், அம்ருத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் ஆகிவற்றின்  6வது ஆண்டு விழாவை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நாளை காணொலி வாயிலாக கொண்டாடுகிறது.

ஸ்மார்ட் நகரங்கள் திட்டம், அம்ருத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியால், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 6ம் ஆண்டு விழாவை நினைவு கூறும் வகையில் இந்த காணொலி நிகழ்ச்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது. இந்த மூன்று திட்டங்களும் நகர்ப்புற புத்துணர்வின் தொலைநோக்கு கொள்கையின் ஒரு அங்கம். இந்திய நகரங்களில் வசிக்கும் 40 சதவீத மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக இது உருவாக்கப்பட்டது.

இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில்வீட்டு வசதி அமைச்சகம் அமல்படுத்திய முக்கியமான சில நடவடிக்கைகள் எடுத்துக் கூறப்படும். இந்நிகழ்ச்சிக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்க மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த பல தரப்பினரையும், வீட்டு வசதித்துறை செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா அழைத்துள்ளார்.

இந்த 6ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில், இந்திய ஸ்மார்ட் நகரங்கள் விருது போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தரவு முதிர்வு மதிப்பீட்டு கட்டமைப்பு (DMAF) மற்றும் பருவநிலை ஸ்மார்ட் நகரங்கள் மதிப்பீடு கட்டமைப்பு (CSCAF) முடிவுகளும் வெளியிடப்படவுள்ளனஇந்திய ஸ்மார்ட் நகரங்களுக்கான கூட்டறிக்கை, துலிப் ஆண்டறிக்கை, நகர்ப்புற விவகார தேசிய மையத்தின் தயாரிப்புகள் ஆகியவையும் இந்த விழாவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730005

-----



(Release ID: 1730092) Visitor Counter : 272