குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுமாறு குடியரசுத் துணைத்தலைவர் மக்களுக்கு வேண்டுகோள்

Posted On: 21 JUN 2021 9:00AM by PIB Chennai

யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுமாறு குடியரசுத் துணைத்தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு இன்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், யோகா உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நமக்கு உதவுவது மட்டுமல்லாமல், சமூகத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்றார். "இது மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது" என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் திரு நாயுடு, தனது மனைவி திருமதி. உஷாம்மாவுடன் இன்று யோகா செய்தார்.

 

----

 (Release ID: 1729053) Visitor Counter : 179