சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUN 2021 9:15AM by PIB Chennai

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,02,887 ஆக குறைந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில், 53,256 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது கடந்த 88 நாட்களில் மிகக்குறைவாகும். நாட்டில் இதுவரை மொத்தம் 2,88,44,199 பேர் குணமடைந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து 39வது நாளாக, தினசரி கொவிட் பாதிப்பை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 96.36 சதவீதம்.

கொவிட் பாதிப்பு வாராந்திர வீதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது 3.32 சதவீதம் உள்ளது. கொவிட் பாதிப்பு தினசரி வீதம் 3.83 சதவீதமாகும். தொடர்ந்து 14 நாட்களாக  5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது

கொவிட் பரிசோதனை திறன் கணிசமாக அதிகரிப்பு - மொத்தம் 39.24 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  தேசியளவிலான தடுப்பூசி திட்டத்தின் கீழ் இது வரை 28 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1729052) வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam