சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

81 நாட்களுக்குப்பின், நாட்டின் தினசரி கொவிட் பாதிப்பு 60,000க்கும் கீழ் குறைந்தது

प्रविष्टि तिथि: 20 JUN 2021 10:11AM by PIB Chennai

81 நாட்களுக்குப்பின், நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு 60,000க்கும் கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு  தொற்று ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த 13 நாட்களாக, நாட்டின் தினசரி கொவிட் பாதிப்பு 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் காரணமாக தினசரி கொவிட் பாதிப்பு குறைந்துள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது நாட்டில் 7,29,243 பேர் கொவிட் சிகிச்சை பெறுகின்றனர்.   கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கையில் 30,776 குறைந்தது.

தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட கடந்த 38 நாட்களாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,619 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,87,66,009- எட்டியுள்ளது. இவர்களின் சதவீதம் 96.27.

கொவிட் பரிசோதனை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,11,446 பரிசோதனைகள் செய்யப்பட்டனஇதுவரை மொத்தம்  39.10 கோடிக்கும் மேற்பட்ட  (39,10,19,083) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728702

 

-----

 


(रिलीज़ आईडी: 1728771) आगंतुक पटल : 316
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Telugu , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Odia , Kannada